மீலாத் விழா பற்றி அமைதியான சில வாதங்கள்

தொகுப்பு & மொழி பெயர்ப்பு :
உம்மு அஹ்மத் தைமியா ஷரஈயா ..
* அபூபக்ர் (ரழி) இரண்டு வருடங்கள் ஆட்சி செய்தார் . அவர் மீலாத் விழா கொண்டாட்டத்தை செய்யவில்லை . அவர் இந்த உம்மத்தின் சித்தீகும் இறைத்தூதரின் குகைத் தோழருமாவார் .

*உமர் ( ரழி ) பத்து வருடங்கள் ஆட்சி செய்தார் . அவர் இந்த மீலாத் விழாவைக் கொண்டாடவில்லை . . அவரோ இந்த உம்மத்தின் பாரூக்காக இருந்தார் . அவர் ஒரு பாதையால் சென்றால் ஷைத்தான் மறு பாதையால் செல்வான் .

*உஸ்மான் ( ரழி ) பதின் மூன்று வருடங்கள் ஆட்சி செய்தார் . அவர் மீலாத் விழாக் கொண்டாடவில்லை . அவர் இறைத்தூதரின் இரண்டு மகள்களுக்கு கணவனாக இருந்தவரும் இரண்டு ஹிஜ்ரத் செய்தவரும் ஆவார். மேலும் இந்த உம்மத்திலே மிக வெட்கக் குணம் கொண்டவர் .

* அலி (ரழி ) நான்கு வருடங்கள் ஆட்சி செய்தார் .அவர் மீலாத் விழாக் கொண்டாடவில்லை . அவர் இறைத்தூதரின் பெரிய தந்தை மகனும் சுவனப் பெண்களின் தலைவியின் கணவரும் ஆவார் .

* ஹசன் ( ரழி ) ஆறு மாதங்கள் ஆட்சி செய்தார் . அவரும் அதைச் செய்யவில்லை . அவர் இறைத்தூதரின் பேரரும் அவர்களின் நேசத்துக்குரியவரும் ஆவார் .

* பின்னர் முஆவியா ( ரழி ) ஆட்சி செய்தார் . அவரும் அதைச் செய்யவில்லை . அவரோ சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்தார் .

*உமையாக்களின் ஆட்சிக்காலம் வந்தது . அதில் உமர் இப்னு அப்துல் அஸீஸ் போன்ற அல்லாஹ்வைப் பயந்த நல்ல ஆட்சியாளர்கள் இருந்தார்கள் . அப்பாசியர் ஆட்சிக் காலம் வந்தது . அதில் ஹாரூன் ரஷீத் போன்ற நல்லாட்சியாளர்கள் இருந்தார்கள் . அவர்களும் இந்த மீலாத் விழாவைக் கொண்டாடவில்லை .

* * * *

** இதோ இவர்கள் தான் இஸ்லாத்தின் உலமாக்களும் இறைத்தூதரை உண்மையாக நேசித்தவர்களும் .. .
அல்லாஹ் இறக்கியதை அதிகமாக அறிந்திருந்தும் அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளதில் மிக அதிக விளக்கம் பெற்றிருந்தும் சிறந்த ( மூன்று ) நூற்றாண்டுகளில் அவர்கள் இந்த மீலாத் விழாவைக் கொண்டாடவில்லை . அவர்களோ திருக்குர்ஆனை மனதில் சுமந்தவர்களாகவும் ஹதீஸ்களின் அறிவிப்பாளர்களாவும் இருந்த நிலையில் ஏன் அதை விட்டார்கள் …..????????????

நாங்கள் கூறுகிறோம் ……..
* நல்லதாக இருந்தால் அதனளவில் எங்களை அவர்கள் முந்தியிருப்பார்கள் …!!!!

மாலிக் ரஹிமஹுல்லாஹ் கூறியதையே நாங்களும் கூறுகிறோம் ……….
* இறைத்தூதர் மற்றும் தோழர்கள் காலத்தில் மார்க்கமாகாத ஒன்று தற்போது மார்க்கமாகவே மாட்டாது ….!!!

** இறைத் தூதர் மறுமை வீட்டுக்குச் செல்லும் போது அல்லாஹ் அவர்களுக்கு இந்த மார்க்கத்தைப் பூரணமாக்கிக் கொடுத்து நிஃ மத்தை முழுமையாக்கிக் கொடுத்த நிலையிலேயே சென்றார்கள் என்பது உறுதியாக அறியப்பட்ட ஒன்று .

* அறிந்து கொள் .. அல்லாஹ் உனக்கு ரஹ்மத் செய்வான் .. !
இந்த சிறந்த மூன்று நூற்றாண்டுகளில் உள்ள அனைவருமே மீலாத் விழா என்று சொல்லப்படும் ஒன்றை அறிந்திருக்கவில்லை . இது பித்அத்தாகும் .
இதை உருவாக்கியதெல்லாம் ( நான்காம் நூற்றாண்டுக்குரிய ) ஷீயாக்களின் ஒரு பிரிவினரான பாதிமீயின்களே . பல அறிஞர்களின் கூற்றுகள் அடிப்படையில் அவர்களின் தலைவனாக இருந்த அல் முஈஸ் லி தீனில்லாஹ் என்று சொல்லப் பட்டவன் அதை விழாக் கோலமாக ஆக்கினான் .

அவனுடைய ஆட்சியில் தெளிவான குப்ரும் முழுமையான பாவங்களும் நிறைந்திருந்தன .

_ மதுபானத்தையும் விபச்சாரத்தின் அனைத்து வகைகளையும் அனுமதியாக்கி இருந்தான் .

_ சலபுகளில் இருந்து தான் நிரபராதியாகுவதையும் அவர்களுக்கு ஏசுவதையும் சஹாபாக்களை காபிராக்குவதையும் பிரகடனப்படுத்தினான்

. இந்த நஷ்டவாளி இவன்தான் மீலாத் கொண்டாட்டம் என்ற பித்அத் உருவாக்கத்தில் தீவீரமாக செயற்பட்டவன் . .
ரசூலுல்லாஹ்வுக்கும் , பாத்திமா , அலி , ஹசன் , ஹுசைன் ( ரழியல்லாஹு அன்ஹும் ) போன்றோக்கும் மற்றும் தனக்கும் சேர்த்து ஆறு வகையான விழாக்களை ஏற்படுத்தினான் .

** பின்னர் அறியாமையில் இருந்த முஸ்லிம்கள் இந்த பாதிமீயீன்களை கண்மூடித் தனமாக பின்பற்றி இந்த பித்அத்தை அரங்கேற்றினர் .

* அறிந்து கொள் _ அல்லாஹ் உனக்கு ரஹ்மத் செய்வான் . ..!
இதை அனுமதி என்று சொல்பவர்களிடத்தில் எந்தவொரு ஆதாரமும் இல்லை .
>> அவர்களின் ஆதாரமெல்லாம் அவர்களின் மனோவிருப்பத்துக்கு ஏற்றாற்போல் அவர்கள் வலிந்து விளக்கம் கொடுக்கும் திருக்குர்ஆன் வசனங்களாகவும் ஆதாரமும் அடிப்படையும் இல்லாத ஹதீஸ்களாகவுமே இருக்கின்றன .
*** **** **** ****

நாங்கள் இந்த மீலாதைக் கொண்டாடுபவர்களிடம் மூன்று கேள்விகளையே கேட்கிறோம் .. அதற்குரிய விடையையும் எதிர்பார்க்கிறோம் …!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

1 : இந்த மீலாத் விழா அல்லாஹ்வுக்கு வழிப்படுவதற்காக செய்வதா ???? அல்லது பாவமா ??

_ ஆம் , நிச்சயம்” வழிப்படுதல் “என்றே கூறுவீர்கள் . “பாவம் ” என்று நீங்கள் சொன்னால் இந்த இடத்திலேயே உங்களுடன் விவாதம் நின்று விடும் .

2: சரி ,” இது கூலி வழங்கப்படக்கூடிய ஒரு வழிபாடு” என்று நீங்கள் கூறினால் இரண்டாவது கேட்கிறோம் ; இதை இறைத்தூதர் அறிந்திருந்தார்களா ??? அல்லது அறியவில்லையா ??? ”

__அறியவில்லை ” என்று நீங்கள் கூறினால் உங்களுக்கு நாசமே . ஏனெனில் மார்க்கத்தை எமக்கு கற்றுத்தந்த மிகப் பெரும் எம் ஆசானை அறிவீனத்தைக் கொண்டு நீங்கள் சந்தேகித்து விட்டீர்கள் . இது மிகப் பெரும் நிபாக் ஆகும் .

3: அப்படியில்லை , ” இறைத்தூதர் அறிந்திருந்தார்கள் ” என்று நீங்கள் கூறினால் மூன்றாவது கேள்விக்கு செல்வோம் . ” அதை தன் உம்மத்துக்கு இறைத்தூதர் எத்திவைத்தார்களா ?? இல்லையா ??”

__ “எத்திவைக்கவில்லை ” என்று நீங்கள் கூறினால் இது கேவலத்தின் உச்சநிலையும் இறைத்தூதர் தனது தூதுத்துவத்தில் இருந்து ஒன்றை மறைத்து விட்டார்கள் என்று அவர்களை சந்தேகிப்பதுமாகும் . ( நஊது பில