தவறான பிரயோகங்களும் அறியாமையான வாதங்களும்

தவறான பிரயோகங்களும் அறியாமையான வாதங்களும் .

ஓர் முஸ்லிமின் மீது அதிகாரம் செலுத்துவது அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவுமாகும் .

அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆட்சியாளரும் அவரின் பிரதிநிதிகளும் ஓர் முஸ்லிமின் மீது அதிகாரம் செலுத்தும் உரிமையுள்ளவரகள் .

இவ்வாட்சியாளருக்கு அல்ஹதீஸில் கலீபா, இமாம்,அமீர்,சுல்தான் ,வலி போன்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

இவ்வாட்சியாளரால் நியமிக்கப்படுபவர்கள் அமீராக, ஹாகிமாக ,காளியாக இருப்பார்கள் .

இஸ்லாமிய ஆட்சி இல்லாத பிரதேசங்களில் இவ்வார்த்தைகளின் கனதியைப் புரியாத எம் சமூகத்தில் தோன்றிய வழிதவறிய அமைப்புகள் தங்கள் தலைமைகளுக்கும் இவ்வார்த்தைகளை சொல்லத்தொடங்கினர்.

கலீபா எனும் வார்த்தையை தரீகாவாதிகளும் அமீர எனும் வார்த்தையை தப்லீக் ஜமாஅத் மற்றும் ஜமாஅத் இஸ்லாமியனரும் மற்றும் பல இயக்கத் தலைவர்களும் பிரயோகிக்கத் தொடங்கினர்.

அதனால் வழிகேடுகளின் தலைவர்கள் அதிகாரம் பெற்றவரகளாக தங்களை கருதிக் கொண்டு தங்களுக்கு கட்டுப்படாதவர்களை கவாரிஜ்கள் அல்லது வழிகெட்டவர்கள் என பட்டம் கொடுக்கத்தொடங்கினர்

இன்னும் சில அமைப்பினர் தங்களை சாராதோரை காபிர்கள் எனவும் கூறத் தொடங்கினர் .

இக்கூற்றும் இவர்களின் பட்டங்களும் பித்அத்தான தெளிவான வழிகேடாகும்.

இவ்வாறே அன்னிய ஆதிக்கங்களில் உள்ள நாடுகளில் உள்ள பல வழிதவறிய அமைப்புகளில் எவை முந்திக்கொண்டதோ அவை அரசாங்கத்தில் சில இடங்களைப் பிடித்துக்கொண்டது.

அதனால் அவைகளின் தலைவர்கள் நாங்கள்தான் முஸ்லிம்கள் விடயத்தில் அதிகாரம் கொண்டவர்கள் என தங்களை அடையாளப்படுத்திய போது அகீதாவை விளங்காத அறியாத மக்கள் அப்படியே அதற்கு அங்கீகாரம் வழங்கிவிட்டனர் .

இதுதான் எம்நாட்டினதும் நிலப்பாடாகும் .

அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவை தவறாகப் புரிந்ததன் விளைவே இதுவாகும் .

இதன் விளைவுகளை இயக்கங்கள் பிரிவுகளின் தீர்ப்புகளினூடாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் .

எனவே அதிகாரம் பெற்றவர்களுக்கு கட்டுப்பட வேண்டும் என சில மௌலவிமார்கள் பிறைக்குழுவை அதிகாரமிக்கதாக வாதிடுவது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடாகும் .

ஓர் இஸ்லாமிய ஆட்சி நடக்கும் பிரதேசத்தில் ஆட்சியாளருக்கு உள்ள அதிகாரத்தை எம்நாட்டில் உள்ள வழிதவறிய அமைப்புகளுக்கு வழங்கி மக்களையும் அதன்பக்கம் அழைப்பது அவர்களுக்கு அகீதாவிலும் ஹாகிமிய்யத்திலும் தெளிவே கிடையாது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

ஷிர்க் பித்அத் எனும் இருளிலிருந்து தௌவ்ஹீத் சுன்னா எனும் வெளிச்சத்துக்கு வந்த நம் சகோதரர்களை மீண்டும் ஷிர்க் பித்அத் எனும் ஜாஹிலிய்யத்திற்கே இம்மௌலவிமாரகள் வழிகாட்டுகிறாரகள்
அல்லாஹ் இருளிலிருந்தும் பாதுகாப்பானாக!
மேலும் அவர்களுக்கும் அகீதாவிலும் ஹாகிமிய்யத்திலும் தெளிவைக் கொடுப்பானாக!

மேலதிக விளக்கத்திற்காக பின்வரும் தலைப்புகளை ஆதாரங்களோடு படியுங்கள்
கிலாபத், இமாரத், ஹாகிமிய்யத்
இன்ஷாஅல்லாஹ் தெளிவடைவீர்கள் .

அல்லாஹ் எல்லோருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

இப்படிக்கு – அன்ஸார் தப்லீகி