அதிகம் என்ற வாதம் வேண்டாம்

*** “அதிகம்” என்ற வாதம் வேண்டாம்***

எந்தவொரு நல்ல விடயத்தை சொன்னாலும் செய்தாலும் அதிகமானோர் என்னசெய்கிறார்களோ அதுவே நல்லதாக இருக்கும் என்ற ஓர் பார்வை மக்களிடத்தில் உள்ளது.. பலர் ஒன்றிணைந்து ஒரு விடயத்தை சொல்லும் போது அதற்கு மாற்றமாக ஒருவர் இன்னொரு விடயம் சொன்னால் சத்தியமாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவம் பலரிடத்தில் இல்லை..

இன்னும் பலர் தம் இயக்கத்தில் பெரும்பான்மையினர் இருப்பதால் அதுவே சத்தியம் என நினைத்து உண்மையை மறைத்தவர்களாக இயக்கத்தை வளர்க்க பாடுபடுகின்றனர்..

“அதிகமானோர்” பற்றி திருக்குரான் என்ன கூறுகின்றது என பாருங்கள்…!!
{وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ (243)} [البقرة: 243] “என்றாலும் மனிதர்களில் அதிகமானோர் நன்றி செலுத்த மாட்டார்கள்”
{وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ (187)} [الأعراف: 187] “என்றாலும் மக்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்”
{ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُونَ (17) } [هود: 17، 18] “என்றாலும் மக்களில்அதிகமானோர் விசுவாசிக்க மாட்டார்கள்”
{ فَأَبَى أَكْثَرُ النَّاسِ إِلَّا كُفُورًا (89)} [الإسراء: 89] “மக்களில் அதிகமானோர் நிராகரிப்போராகவே இருக்கின்றனர்”
{ وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ} [الأنعام: 116] “பூமியில் உள்ள அதிகமானோரை நீர் பின்பற்றினால் அல்லாஹ்வின் பாதையை விட்டும் உம்மை வழிகெடுப்பார்கள்”

** திருக்குரானின் பெரும்பாலான இடத்தில் அதிகம் பேரை பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான் .. எனவே அதிகம், கூட்டமைப்பு, இயக்கம் , கொள்கையை மறைத்த ஒற்றுமை போன்ற போலிவாதங்களை வைத்து ஏமாற வேண்டாம்..

#طوبى_للغرباء#